13.11.19- மொட்டுக்கு வாக்களித்து முதலைக்கு இரையாகப் போகிறீர்களா..

posted Nov 12, 2019, 4:54 PM by Habithas Nadaraja   [ updated Nov 12, 2019, 4:55 PM ]
மொட்டுக்கு வாக்களித்து முதலைக்கு இரையாகப்போகிறீர்களா?
அன்னத்திற்கு வாக்களித்து அழகாக வாழப்போகிறீர்களா?அம்பாறை மாவட்ட முன்னாள் எம்.பி. சங்கர் கேள்வி..மொட்டுக்கு வாக்களித்து முதலைக்கு இரையாகப்போகிறீர்களா? அல்லது அன்னத்திற்கு வாக்களித்து அன்னமுண்டு அழகாக வாழப்போகிறீர்களா? நீங்களே முடிவெடுங்கள்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் நேற்று(12) வினாயகபுரத்தில் நடைபெற்ற  மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித்பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற சந்திப்பில் அவர்மேலும் கூறியதாவது:

வெள்ளைவான் சாரதி கூறிய கருத்துக்களைக்கேட்கும்போது இந்த உலகில் கம்போடியாவை விட மிகவும் கொடுரமான சித்திரவதை அட்டுழியம் நிறைந்த கொடுரத்தைஇலங்கையில் செய்திருக்கின்றனர்என்பதை அறியமுடிகிறது.

தெரிந்து முதலைகளுக்கு 300பேரை இரையாகஆகுதி செய்த சம்பவம்அது. இதுபோல்இன்னும்  எத்தனைஆயிரம்மக்களைஇவ்வாறு கொன்று குவித்துள்ளார்களோ தெரியாது. காணாமல்போனவர்களும் இதற்குள் உள்ளடக்கமோ தெரியாது.

அப்படிப்படவர்களை மீண்டும் ஆட்சிபீடத்தில்ஏற்றுவது நல்லதா? மீண்டும்கொடுரமான யுகமொன்றுக்கு நாங்களே வழிவகுத்தவர்களாவோம்.

சஜித்ஜனாதிபதியானால்இந்த அழகான இலங்கைத்தீவு மனிதாபிமானமுள்ள ஊழலற்ற சர்வாதிகமற்ற குடும்பஆட்சியற்ற சமாதானம் நிலவும் புண்ணியபூமியாக மாறும். ஆம் உண்மையில் நல்லதொருமாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

அவர் தோற்றால் ஒட்டுமொத்தஸ்ரீலங்கனும் தோற்றதற்குச்சமன்.  மீண்டும் அடிமைச்சமுகம் உருவாக வழிவகுக்கும்.ஊழலும் அராஜகமும் தலைவிரித்தாடும். அதாவது மீண்டும் இருண்ட யுகமொன்று உருவாகும்.

1983களிலிருந்து தமிழ்மக்கள் பல யுத்தங்களைக்கண்டவர்கள். துன்பத்துக்குள்ளாகி பல வலிகளை உணர்ந்தவர்கள். கிறீஸ்மனிதன்யுகத்தை கண்டவர்கள்.

சஜித் மனிதாபிமானத்துடன்அபிவிருத்திகளைச்செய்யக்கூடியவர். தமிழர்கள்ஆயுதம்தூக்கியது உரிமைக்காக.பின்னர்உரிமைஅரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார்சுழியைஇடுங்கள்.வாழ்வுசிறக்கும் என்றார்.

காரைதீவு சகா


Comments