14.01.22- சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம் விதிப்பு..

posted Jan 13, 2022, 4:32 PM by Habithas Nadaraja
அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் 2021 ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 359 வழக்குகளுக்கு நீதிமன்றங்களினால் 15 இலட்சத்தி 43 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 522 வர்த்தகர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் 428 வர்த்தகர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயணத்தடை மற்றும் கொவிட் -19 காலப்பகுதியில் கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோரின் முறைப்பாட்டையடுத்து அம்பாறை, தெஹியத்தக்கண்டி, பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Comments