கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பிளாஸ்ரிக் பாதுகாப்பு திரைக்கவசத்தை செலான் தனியார் வங்கி கிழக்கிலங்கையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயணிக்கும் முச்சக்கரவண்டிகளுக்கு விநியோகித்துவருகிறது. செலான் வங்கி முன்னெடுத்துவரும் சமுகநலத்திட்டத்தின் ஓரங்கமாக இத்திட்டம் கிழக்கிலங்கையில் கிழக்குமாகாண பிராந்திய முகாமையாளர் எம்.எச்.எம்.றிஸ்மிஹூசைனின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. செலான்வங்கியின் சம்மாந்துறைக்கிளை நேற்று இச்செயற்றிட்டத்தை சம்மாந்துறைக்கிளை முகாமையாளர் நா.மோகனப்பிரகாஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தது. சம்மாந்துறை நகரில் மாணவர்கள் பயணிக்கும் முச்சக்கரவண்டிகளுக்கு கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பிளாஸ்ரிக் பாதுகாப்பு திரைக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வங்கியின் ஏனைய உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிக்ள் சுகாதாரஅதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். ( வி.ரி.சகாதேவராஜா) |
பிறசெய்திகள் >