14.04.19- கிரான்குள ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெற்ற இராமநவமி விசேட பூஜை நிகழ்வுகள்..

posted Apr 13, 2019, 6:31 PM by Habithas Nadaraja
இராம நவமி  என்பது அயோத்தி மற்றும் கோசலை ஆகியவற்றை ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு  பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை ஆகும். அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் அறியப்படுகிறது. அது 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் வருகிறது. ஆகையால் சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்று அழைக்கப்படுகிறது.

கிரான்குள பதியில் எழுந்தருளி நாடி வரும் அடியார்களின் நோய் பிணிகளைத் தீர்த்து, குறைகளை நிறைகளாக்கி அருள் வழங்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அதாவது இன்று இராம நவமி  விழாவானது நூற்றுக் கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ வெகு விமரிசையாக இடம்பெற்றது. 
Comments