14.04.19- தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி..

posted Apr 13, 2019, 6:24 PM by Habithas Nadaraja   [ updated Apr 13, 2019, 6:25 PM ]
தமிழ் சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் அனைத்து மக்களிற்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எமது நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டானது நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவை இந்த இரு சமூகங்களுக்கும் இடையில் மேம்பட கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமான பண்டிகையாகும்.  துரதிஸ்ட்டவசமாக எமது நாட்டில் அத்தகைய நம்பிக்கையை கடந்த காலங்களில் கட்டியெழுப்ப முடியவில்லை.  அதன் விளைவாக இன்றும் மக்கள் பல்வேறு துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகிறார்கள். அதுமாத்திரமன்றி இரு சமூகங்களுக்குமிடையிலான விரிசல் அதிகரித்துள்ளதேயன்றி குறையவில்லை.

எம்மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறப்பெற்று இந்த நாட்டில் நிரந்தர அமைதியும் நீதியும் நிலைநாட்டப்பட நாம் இந்த நன்னாளில் இறைவனை வேண்டுவோமாக. 

மேலும் இந்த புத்தாண்டு நாளில், அற்ப அரசியல் இலாபங்களை கருத்திற்கொள்ளாது, எமது நாட்டினை முன்னேற்றப் பாதையில் இட்டுச்  செல்லும் ஒரே நோக்கத்தோடு, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவேண்டும் என இந்நாட்டின் அரசியல் தலைவர்களை அழைத்து நிற்க விரும்புகிறேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையினையும் நிலைநாட்டும் ஒரு இலங்கை தீவினை உருவாக்குவது எமது கடமையாகும். எனவே இந்த சித்திரை புத்தாண்டு நாளில் இந்த தலையாய  ருமத்தினை நிறைவேற்ற இன,மத ,கட்சி, வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அனைத்து மக்களிடமும் வேண்டுகோள்  விடுக்க விரும்புகிறேன்.
வளமானதும் செழிப்பானதுமான ஆண்டாக  இந்த ஆண்டு அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 
இரா. சம்பந்தன் 
பாராளுமன்ற உறுப்பினர் 
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Comments