15.07.19- இலவச கண் பரிசோதனையுடன் பார்வையில் குறைபாடு உள்ளவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கல்..

posted Jul 14, 2019, 6:09 PM by Habithas Nadaraja
சாவகச்சேரி கோவில் குடியிருப்பை சேர்ந்த அமரர் பூங்கோதை சபாரத்தினத்தின் ஓர் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் இலவச கண் பரிசோதனையுடன், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்கல் நிகழ்வு
13/07/2019 ல் சாவகச்சேரி கச்சாய் வீதியில் சத்தியம்மன் வித்தியாலத்தில் சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

சாவகச்சேரி நகரம், சங்கத்தானை, கல்வயல், மீசாலை, நுணாவில் போன்ற கிராமசேவக அலுவலக பிரிவுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதனைக்காக வருகை தந்திருந்தனர். பரிசோதனையின் போது 126 பேருக்கு பார்வையில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

சாவகச்சேரி லயன்ஸ் கழகத் தலைவர், லயன்ஸ் இளங்குமரன், சமூக சேவையாளர் அருளானந்தம், தொழில் அதிபர் A.K. சபாரத்தினம் குடும்பத்தினர், லயன்ஸ் கழக தொண்டர்கள் என பலர் நிகழ்வில் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

தொழில் அதிபர் A.K. சபாரத்தினம் குடும்பத்தினர், போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி, சாவகச்சேரி வைத்தியசாலை புனரமைப்பு நிதி என பல சமூக பணிகளை தென்மராட்சி மண்ணுக்கு செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments