15.11.19- தேர்தலையிட்டு அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்..

posted Nov 14, 2019, 5:46 PM by Habithas Nadaraja
எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே குறித்த இரு நாட்களும் நாடு பூராகவும் உள்ள சகல மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Comments