16.01.22- சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயம் 125ஆவது ஆண்டு விழா..

posted Jan 15, 2022, 7:18 PM by Habithas Nadaraja
சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயம்
125ஆவது ஆண்டுவிழா இன்று ஓராண்டு தொடர் விழா ஆரம்பம்..

உலகளாவியரீதியில் ஜீவசேவையாற்றிவரும் ஸ்ரீ ராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வீரத்துறவி வங்கத்தின்சிங்கம் சுவாமி விவேகானந்தர் இலங்கைத் திருநாட்டிற்கு வருகை தந்து இன்று(15.01.2022) 125ஆண்டுகளாகின்றன.

ஆம் சுவாமி விவேகானந்தர் 1897ம் ஆண்டு ஜனவரி 15ந்திகதி வருகை தந்திருந்தார். அவர் இலங்கையில் கொழும்பு யாழ்ப்பாணம் கண்டி அனுராதபுரம் மாத்தளை போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்து 11 நாட்கள் தங்கியிருந்தார்.

அவரது அந்த வரலாற்றுரீதியான விஜயத்திற்கு இன்று  125ஆண்டுகளாகின்றது. அதனையொட்டி இலங்கை இராமகிருஸ்ணமிஷன் கொழும்பு தொடக்கம் மட்டக்களப்பு காரைதீவு ஈறாக பல இடங்களில் நினைவுதின விழாக்களை ஏற்பாடுசெய்துள்ளது.

இவ்விழாக்களுடன்  ஓராண்டு காலத்திற்கு அதாவது அடுத்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை பலவித நிகழ்ச்சிகளை கிரமமாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

சுவாமி விவேகானந்தர் 1897 தைமாதம் மேலைத்தேய பயணத்தை முடித்துவிட்டுத்தாயகமான இந்தியா திரும்பும் வழியில் கொழும்புக்கு வந்தார். அதாவது சுவாமிஜீ 1897ம் ஆண்டு ஜனவரி 15ந்திகதி வருகை தந்திருந்தார்.அவர் நிலைதடுமாறி தாழ்ந்து கிடந்த சமுதாயத்திற்கு நம்பிக்கையும் உத்வேகத்தையும் ஊட்டினார். நடைப்பிணமாக வாழ்ந்தவர்களும்கூட,வீறுநடை போட்டு தியாகத்தையும் தொண்டையும் கடைப்பிடிக்கும்விதமாக இத்திருநாட்டைமுன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றனர்.

சுவாமி விவேகானந்தரின் அந்த சரித்திர நிகழ்வைக் கொண்டாடுவது அவர் புகழ்பாடும் முயற்சியல்ல. பேரொளிச் சூரியனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியஅவசியமில்லை. அந்த வீரத் துறவியைக் கொண்டாடுவது, மக்களிடையே மாண்டுகொண்டிருக்கும் மனிதநேயத்தையும், கலாசார-ஆன்மீக விழுமியங்களையும் உயிர்த்தெழச்செய்யும். இனம், மதம் என்பவற்றைக் கடந்த அவரின் போதனைகளைப் பரவச்செய்வோம். இதற்காக அனைவரும் ஒன்று கூடி உழைப்போம்!

இலங்கையில் 125 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த 11 வரலாற்று நாட்களை,பொற்பதிவுகளை இப்போது காண்போம்!

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம்
(1897 ஜனவரி 15 முதல் 26 வரை - 11 நாட்கள்)

சுவாமி விவேகானந்தரின் மேலைத்தேய பயணத்தின் போது அதாவது 1893ம் ஆண்டு மேமாதம் அவர் பயணம் செய்த நீராவிக்கப்பல் இலங்கை துறைமுகத்தில் ஒருநாள் நிற்கவேண்டி ஏற்பட்டது. அன்று சுவாமி அவர்கள் கொழும்பு மாநகரின் களனிப் பகுதியில்உள்ள புத்தராலயம் ஒன்றினையும் பார்வையிட்டார்.

மீண்டும் 1897 தைமாதம் சுவாமிஜீயின் மேலைத்தேய பயணத்தை முடித்துவிட்டுத்தாயகமான இந்தியா திரும்பும் வழியில் கொழும்புக்கு வந்தார். அன்றைய தினத்தையேஆதாரபூர்வமாக சுவாமிஜீ இலங்கைக்கு வந்த தினமாக குறிப்பிடலாம். அது 1897தைமாதம் 15ம் திகதி ஆகும். இப்போது சுவாமிஜீ உலகமறிந்த பிரபல்யமான தீர்க்கதரிசி.

இலங்கையில் அந்த மகானுக்கு மகத்தான வரவேற்பு நடைபெற்றது. அவர் வருகையை அறிந்த இந்துமத ஆர்வலர்கள் முன் கூட்டியே சில ஒழுங்குகளைத் தயார் செய்தனர்.

செலவுக்காக சில பரோபகாரிகளிடமிருந்து சிறு தொகை பணமும் புரட்டப்பட்டது.(800ரூபாய் இலங்கை பணம்) முழு இந்து சமூகமும் சுவாமிஜீயை வரவேற்க கப்பல் வந்து இறங்கிய துறைமுகத்தை அடைந்தது. இலங்கையில் வாழ்ந்த இந்து மத மக்கள் சிக்காகோ பிரசங்கத்தை வெற்றிகரமாக நிகழ்த்திய இளம் துறவியை வரவேற்பதில்ஆர்வம் கொண்டனர். 1893 செப்டெம்பர் மாதத்தில் உலக இந்து மத மகா நாட்டில்சுவாமிஜீ ஆற்றிய உரை இலங்கை பத்திரிகையில் வெளியானது 'இந்துமத ஞானியின்வருகை' எனும் தலைப்புடன் வெளிவந்த செய்தி இலங்கை வாழ் இந்து பாரம்பரியசமூகத்தினருக்கு உற்சாகத்தினை அளித்தது. அவரை வரவேற்பதற்காக எடுக்க வேண்டியநடவடிக்கைகளை கலந்து ஆலோசிக்க இந்து மத அபிமானிகள் 'தம்பையா சத்திரம்'எனும் மண்டபத்தில் கூடி முடிவுகள் எடுத்தனர். தொடர்ந்து இந்து சமூக முக்கியதலைவர்கள் சுவாமிஜீயை வரவேற்பதற்காக கொழுப்பு கப்பல் துறைமுகத்தைஅடைந்தனர். இது தொடர்பான செய்திகள் இந்திய செய்தித் தாளான 'பிரபுத்த பாரத'எனும் ஆங்கில பத்திரிகையில் (பெப்ரவரி 1897) பிரசுரிக்கப்பட்டது.

இலங்கை சட்டசபை உறுப்பினர் மேதகு பி. குமாரசுவாமித்துரை தலைமையிலானகுழுவினர் சுவாமிஜீயை வரவேற்க துறைமுகத்திற்கு வந்திருந்தனர் கூடவேதிரு.அருனாச்சலம், திரு.தம்பையா ஆகியோரும் வந்திருந்தனர். தை மாதம் 15ம் திகதி சரியாக மாலை 6 மணிக்கு சுவாமிஜீயை ஏற்றி வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில்நங்கூரம் இடப்பட்டது. சுவாமிஜீ மணம்கமழ் மாலை அணிவிக்கப்பட்ட பின் அழகிய இருகுதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் கருவாதோட்டத்தின் புதிதாக அமைப்பட்டிருந்தமாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டார். அக்கட்டிடம் திரு.ரத்தினசபாபதி என்பவருக்குசொந்தமானது. 

இக்காலத்தில் விவேகானந்தா லொட்ஜ் எனும் பெயரால்அழைக்கப்படுகின்றது. சுவாமிஜீயை ஏற்றி வந்த வண்டி மெதுவாக செல்ல அதனைதொடர்ந்து ஏராளமான வண்டிகளும் ஆயிரக்கணக்கான மக்களும் உற்சாகத்துடன்தொடர்ந்தனர். ஊர்வலம் சுவாமிஜீயுடன் வரவேற்பு மண்டபத்தை அடைந்ததும் பிரம்மிக்கதக்கதான பந்தலினுள ; அழகிய செயற்கை தாமரை மலர் விரிந்தது. அதனுள் இருந்துரோஜா மலர் இதழ்கள் சுவாமிஜீ மீதும் பக்தர்கள் மீதும் தூவப்பட்டன. தொடர்ந்துசுவாமிஜீ மங்கள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டார். வயலின் இசையோடு கூடியதேவாரம் பாடப்பட்டது. பாராட்டுப் பத்திரமும் வாசித்து அன்போடு அளிக்கப்பட்டது.

இலங்கைப் பத்திரிகையான 'சிலோன் ஒப சேவர்' பத்திரிக்கை சுவாமிஜீயின் வருகையை'ஓர் இந்து துறவியின் கொழும்பு வருகை' எனும் தலைப்பில் பிரசுரித்தது. அதில் அவரதுமேற்பட்ட படிப்பு மற்றும் அவரது மேலைத்தேய சுற்றுப்பயணம் என்பவற்றையும் குறிப்பிட்டிருந்தது. அது மாத்திரம் அல்ல அந்த இந்து துறவிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த வரவேற்பு குறிப்பிடப்பட்டது. அவர் சென்னை திரும்பும் முன் கொழும்பு,கண்டி ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளார் என பிரசுரித்திருந்தனர்.

அதே போல 'த சிலோன் இன்டிபென்டன்ற்' எனும் பத்திரிக்கையும் சுவாமிவிவேகானந்தரின் வருகையை பிரசுரித்தது. அதில் இந்து துறவியின் வருகையால்இந்துக்களிடம் ஆன்மீக விழிப்பு ஏற்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது.நீண்ட மேலைத்தேய பயணத்தை முடித்து விட்டு கொழும்பு வந்திறங்கிய சுவாமிஜீ அம்மக்களால் வரவேற்கப்பட்டு மிகவும் கழைப்படைந்திருந்தார். கூடவே அவரை வரவேற்பதற்காக சுவாமி விவேகானந்தரோடு துறவு வாழ்க்கை மேற்கொண்ட சுவாமிநிரஞ்சனானந்தரும ; திரு.டி.சொக்கநாதன், திரு.ஏ.லோகநாதன் ஆகியோரும் சென்னையிலிருந்து வந்திருந்தனர்.

இலங்கையின் முழு இந்து சமூகமும் சுவாமிஜீயை வரவேற்பதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்தது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழுவிற்கு திரு.டி.குமாரசுவாமி திரு.அருனாசலம் ஆகியோர் தலைமை தாங்கினர். சுவாமிஜீக்கு மணம் மிகுந்த மல்லிமைலர் மாலை சூட்டி பூச்செண்டும் கையளித்தனர். கூடியிருந்தவர்களின் கரகோசம் வானை பிளந்தது. அனைவரது கண்களும் சுவாமிஜீயின் உருவத்தையே அன்போடு உற்று நோக்கினர்.

வழியின் இரு பக்கங்களிலும் அழகிய பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுவாமிஜீ தங்குவதற்கென ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த தற்காலிக இடத்தை நோக்கி ஊர்வலம் நகர்ந்தது. முன்னே மக்கள் மகிழ்ச்சி பொங்க கொடி, குடை போன்ற எம் சமய மங்கலப் பொருட்களுடன் சென்றனர். சிலர் சுவாமிஜீக்கு மலர்களை தூவினர். முன்பு போலவே அலங்கரிக்கப்பட்ட இரண்டாம் பந்தலை கடக்கும் போது அங்கும் செயற்கைத் தாமரை மலர்ந்தது. அங்கும் றோஜா இதழ்களினால் மலர் தூவப்பட்டன. இன்னுமொரு காட்சி அப்பூவின் மலர்ச்சியுடன் சில பறவைகளும் தம் இறக்கைகளை அடித்துப் பறந்தன. ஆழகிய ஊர்வலத்தை முண்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான ஜனங்கள் சுவாமிஜீயின் உருவத்தை காண நெருங்கினர்.

ஊர்வலம் சுவாமிஜீ தங்குமிடத்தையடைந்ததும் அங்கு தோட்ட வாயிலில் வட்டமாக கதிரைகள் அடுக்கப்பட்டிருந்தன. அங்கு மலர்கள் தூவி வரவேற்கப்பட சுவாமிஜீயம் கூட வந்தவர்களும் அமர்ந்தனர். எங்கும் ஒரே அமைதி. அமைதியை தொடர்ந்து வயலினின் மெல்லிய இசையுடன் இந்துமத நாகரிக அடிப்படையில் பாரம்பரிய பதிகங்கள் பாடப்பட்டன.

தொடர்ந்து மாண்பு மிகு திரு.குமாரசுவாமி இந்துப் பாரம்பரிய முறையில் சுவாமியவர்களை பணிவுடன் நமஸ்கரித்து இலங்கை வாழ் இந்துக்கள் சார்பாக அன்பான வரவேற்பு பத்திரத்தை வாசித்தார். அப்பத்திரத்தில் அடங்கிய முழு விபரமும் மறநாள் 'சிலோன் ஒப்சேவர்' பத்திரிகையில் வெளியானது. ஆதில் கூறப்பட்ட சாராம்சம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பேரருளால் இந்துமத இலட்சியத்தை ஐரோப்பிய நாடுகளில் பரப்பிய சுவாமிஜீக்கு வாழ்த்து கூறப்பட்டிருந்தது.

அதற்கு சுவாமிஜீ மக்கள் மகிழ்ச்சியடையும் படியாக தன் இனிய குரலால் ஏற்புரை நல்கினார். அவரது இனிய குரலால் எளிமையான சொற்களால் ஏற்புரை கூறி முடிக்கும் போது மக்கள் உணர்ச்சிவசப்பட்டு 'ஜெய ஜெய மாகதேவா' எனக் கோசம் எழுப்பினர். தொடர்ந்து சுவாமிஜீயின் பிராத்தனையுடன் பன்னீர் தெளித்து அன்றைய கூட்டம் நிறைவுற்றது. மக்கள் கூட்டம் பிரிய மனமில்லாது நின்றனர். ஆயினும் சுவாமிஜீ அவர்களிடமிருந்து விடைபெற்றார்.

மறுநாள் 16ம் திகதி மாலை சுவாமிஜீ தன் முதலாவது சொற்பொழிவை அதாவது 'இந்தியா ஓர் புண்ணிய பூமி' எனும் தலைப்பில் நிகழ்த்தினார். அச் சொற்பொழிவின் சாரம் 18ம் திகதிய 'இலங்கை ஒப்சேவர்' பத்திரிக்கையில் வெளியானது. அச் சொற்பொழிவின் சாரமாக இந்துமத உண்மையும் அம்மதத்தைப் பேணும் தாய் நாட்டில் உள்ள மக்களது உயர்வும்இ மதிப்பும் இந்துக்கள் ஆன்மீகத்துக்கு அளிக்கும் முக்கியத்துவமும் அடங்கியிருந்தது. அத்தோடு தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு உபசாரத்திற்கும் உணர்வு பூர்வமாக சுவாமிஜீ நன்றியினைத் தெரிவித்தார்.

சகிழக்கின் முதல் பொதுச் சொற்பொழிவு.

தனக்குக் கிடைத்த வரவேற்பினை அன்போடு ஏற்றுக் கொண்டு சுருக்கமான பதிலுரை அளித்தார். 16ம் திகதி மாலை பொது மக்களுக்காக வழங்கிய சொற்பொழிவில் மேலைத்தேய நாடுகளில் இருந்து திரும்பிய பின் கொடுக்கும் முதல் சொற்பொழிவு என்பதனை குறிப்பிட்டார். ஆந்த வகையில் இலங்கை மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும் அவரோடு இருந்து ஆன்மீக ஒளிபெற்றவரும் தன் குருநாதரின் போதனைகளை உலகுக்கு எடுத்துக்காட்டியவருமான சுவாமிஜீயின் முதல் சொற்பொழிவைக் கேட்ட மக்கள் பாக்கியவான்கள்.

அன்று சுவாமிஜீ உணர்வு பூர்வமாக தன் தாயகத்தை நினைத்து அதன் பெருமையை உலகுக்கு உணர்த்தினார். அங்கு பொங்கித் ததும்பும் அன்பு, அருள் தூய்மை அமைதி பற்றிக் குறிப்பிட்டார். தர்மத்தை நிலைநாட்டிய பெரியார்கள் தோன்றிய நாடு என்பதைக் கூறினார். அப்பெரியார்களின்இ ஞானிகளின் வரவால் உலகமே இந்தியாவை நோக்கிற்று. அதாவது இந்தியா ஆன்மீக தெய்வ நெறியால் உலகத்தையே கவர்ந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினர். மொத்தமாக 'இந்தியா பரம புண்ணியமான நாடு' என்ற பொருளில் ஆவேசமாக சொற்பொழிவினை நிகழ்த்தினார்.

அச்சொற்பொழிவால் இந்துத் தமிழ் மக்கள் அனைவரையும் சுவாமிஜீ கவர்ந்து கொண்டார்.

சசிவன் கோயிலுக்கு சுவாமிஜீயின் வருகை
மறு நாள் 17ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை ஏராளமான பக்தர்களுடன் உரையாடினார். பகல் முழுவதும் சுவாமிஜீ மக்களோடு நேர்காணலிலேயே தன் நேரத்தை செலவிட்டார். மாலை தலைநகரில் உள்ள கொச்சிகடை பொண்னம்பலவானேஷ்வரர் என்று அழைக்கப்படும் சிவன் கோயிலுக்கும் சென்றார். அங்கும் செல்லும் வழியெல்லாம் பூரணகும்பம் வைக்கப்பட்டிருந்தது. இலங்கை நாட்டின் வழக்கப்படி வாயிற் படிகளில் பழங்களை அலங்காரமாக வைத்து தீபமேற்றியிருந்தனர். ஆலயத்துள் சுவாமிஜீ 'ஜய் மகாதேவா' என்ற கோஷத்துடன் வரவேற்கப்பட்டார். பின்பு தன் தங்குமிடத்திற்குச் சென்றும் கூட இரவு இரண்டரை மணிவரை இலங்கை பக்தர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுள் அந்தணர்களும் அடங்கியிருந்தனர்.

மறுநாள் அதாவது 18ம் திகதி மாலை 4.00 மணியளவில் சுவாமிஜீ ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தரான திரு.செல்லையா அவர்களின் வீட்டிற்கு வந்தார். அங்கும் சுவாமிஜீயை வரவேற்குமுகமாக கலையம்சத்தோடு கூடிய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பூக்கள் தூவப்பட்டு வரவேற்கப்பட்ட சுவாமிஜீயின் இருக்கையில் வெல்வெட் துணியால் மூடப்பட்டுஇ இந்துக்களால் மேலாக மதிக்கப்படும் தர்ப்பை புல் இருக்கை போடப்பட்டிருந்தது. சுவாமி புனித கங்கை நீரும் பன்னீரும் தெளித்து வரவேற்கப்பட்டார். சுவாமிஜீயும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதத்தினை அளித்தார்.

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டத்தைக் கடந்து மண்டபத்துட் சென்றார். சுவாமிஜீயின் இருக்கைக்கு எதிரே பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவுருவப் படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதனைக் கண்ட சுவாமிஜீ தன் குருநாதரின் படத்தின் முன்பாக சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினர். அன்று முதல் சீடரால் குருவின் பெருமை இலங்கையிலும் பரவத் தொடங்கியது. திரு.செல்லையா அவர்களது இடம் சாதுக்கள் தங்குவதற்கு பொருத்தமானது என்பதையும் சுவாமிஜீ சுட்டிக்காட்டினார். பின் தேவார பாராயணத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.


சுவாமிஜீயின் இரண்டாவது சொற்பொழிவு

1897ம் ஆண்டு தை மாதம் 18ம் திகதி இரவு சுவாமிஜீ கொழும்பு நகர பொது மண்டபத்தில் 'வேதாந்த தத்துவம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். வேதத்தை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய சமயத்தை விளக்கிப் பேசினார். ஆயினும் அவர் உரையில் மேலைத்தேய நாகரிகத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவதை கண்டித்தார். காரணம் அக்கூட்டத்தில் கலந்து கொண்டோரில் பலர் மேலைத்தேய பாணியில் உடை அணிந்திருந்தனர். அவ்வாறாக ஆடையணிதலை ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றும் அடிமைத்தனம் என்றும் கூறினார். கறுப்பு மனிதனுக்கு பொருத்தமான ஆடைகளையே அணிதல் வேண்டும் எனவும்இ எம் நாட்டு கால நிலைக்கு ஒப்பான வண்ணச்சாயல்களுடைய ஆடைகளே பொருத்தமானவை என்பதையும் குறிப்பிட்டார். அவர் தம்; சொற்பொழிவில் எம் நாட்டு இயற்கை வனப்பும் காலநிலையும் ஆடைகளும் பொருந்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

சுவாமிஜீயின் கண்டி மற்றும் அனுராதபுர பயணம்
நான்கு நாட்கள் கொழும்பு நகரில் மிகவும் உற்சாகமாக பொழுதை கழித்த சுவாமிஜீ ஐந்தாம் நாளான 19. 01. 1897அன்று காலையில் கண்டி நகருக்குப் புறப்பட்டார். சுவாமிஜீ ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வின் படி 19ஆம் திகதி சென்னை புறப்படுவதாக இருந்தது. ஆயினும் இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து அன்போடு கேட்ட அழைப்புகளை அவரால் தட்ட முடியவில்லை. அதன் பிரகாரம் 19ஆம் திகதி காலை திரு.தம்பையா மற்றும் திரு.அருணாச்சலம் என்பவர்களால் விசேடமாக ஒழுங்கு படுத்தப்பட்டு விசேடமாக இணைக்கப்பட்ட ரயில் பெட்டி சேர்ந்த கொழும்பு - கண்டி ரயில் மூலம் சில அன்பர்களுடன் புறப்பட்டார். கண்டி புகையிரத நிலையத்தில் சுவாமிஜீயை வரவேற்பதற்காக பெருந்திரளான மக்கள் கூட்டம் இந்திய பண்பாட்டு வாத்திய குழுவுடன் காத்திருந்தது. அங்கும் சிறப்பான ஊர்வலத்துடன் சுவாமிஜீஇ அவர் தங்கியிருக்க ஒழுங்கு செய்யப்பட்ட பங்களாவை நோக்கி பயணமானார். அங்கும் சுவாமிஜீக்கு வரவேற்புரை வாசிக்கப்பட்டது. அதற்கான பதிலுரையும் சுவாமிஜீயால் வழங்கப்பட்டது.


கண்டியிலிருந்து அன்று மாலையே சுவாமிஜீ மாத்தளை நோக்கி புறப்பட்டார். அங்கே இரவு பொழுதை கழித்துவிட்டு மறுநாள் காலை (20ஆம் திகதி புதன்கிழமை) 200 மைல் தொலை தூரம் உள்ள யாழ்ப்பாணம் நோக்கி பயணம் தொடங்கியது. கோச்சு வண்டி பயணம் சுவாமிஜீக்கு பெரும் சிரமமாக இருந்தது. (கோச்சு வண்டி - குதிரை வண்டி) கரடுமுரடான பாதையில் வழியாக செல்லும் போது சுவாமிஜீ பயணம் செய்த வண்டியின் சில் ஓட முடியாது ஆட்டம் கண்டன. வேறு வண்டிகளும் எடுக்க முடியாத சன நடமாட்டமற்ற பாதை மிக நீண்ட தூரம் சுவாமிஜீயின் கூடவே வந்தவர்களும் நடந்து செல்ல வேண்டியதாயிற்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தைவிட காலதாமதமாகவே அனுராதபுரத்தை அடைந்தனர்.

அங்கு ஓர் அரச மர நிழலில் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் மதிக்கத்தக்க எண்ணிக்கையான மக்கள் கூடினர். அவர்கட்கு சுவாமிஜீ 'வழிபாடு' என்பது பற்றி ஒரு சிற்றுரை ஆற்றினார். தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் உரையை மொழி பெயர்த்தனர். அனுராதபுரத்தில் இருந்து புறப்பட்ட சுவாமிஜீ அடுத்து வந்து வவுனியாவில் இளைப்பாற முடிந்தது. பிரயாணக் களைப்பும்இ இரு இரவுகளின் தூக்கமின்மையும் சுவாமியின் உடலை சோர்வடையச் செய்தன. வவுனியாவில் மக்கள் அளித்த வரவேற்புக்கு சுவாமிஜீ மிக எளிய முறையில் சுருக்கமாக ஏற்புரை வழங்கி விட்டு காட்டுப்பாதை வழியே யாழ்பாணம் நோக்கிய பயணம் ஆரம்பமாகியது.
சூயாழ்ப்பாணத்தில் சுவாமிஜீயின் வருகையாழ்ப்பான எல்லைக்கு 12 மைல்கள் முன்னதாகவே தன் அன்பின் வெளிப்பாட்டால் மக்கள் சுவாமிஜீயை வரவேற்க தொடங்கினர். யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீதிகளும் ஒவ்வொரு வீடுகளுமே பண்டிகைக் கோலம் பூண்டது.

சுவாமிஜீயையும் அவர் கூட வந்த பெரியார்களையும் வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்தனர். மேள வாத்திய கோஷங்கள் நாற்றிசையும் முழங்கின. தீவர்த்திகள் இருளை ஓடச் செய்தன. இரு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் சுவாமிஜீ அழைத்துவரப்பட்டார். 24ஆம் திகதி மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுவாமிஜீக்கு விழா எடுக்க ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. பெரியகடை முதல் இந்துக் கல்லூரி வரை செய்யப்பட்டிருந்த வீதி அலங்கார அழகை வர்ணிக்க முடியாது. வீதியின் இருமருங்கிலும் தோரணங்கள் வீட்டு வாசல்களில் பூரண கும்பங்கள் எல்லா இடங்களிலும் சுவாமிஜீயை வரவேற்று தீபம் காட்டி சுகந்த தூபமிட்டனர். 15 000 க்கும் மேற்பட்ட மக்களின் ஊர்வலம். ஊர்வலத்தில் கலந்து கொண்ட எவரும் காலில் செருப்பு அணியவில்லை. சரியாக ஏழு மணிக்கு சுவாமி அவர்கள் தம் பக்தர்களுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார சிம்மாசனத்தில் அமர்ந்தார். அருகில் அவர் சீடர்கள் இருமருங்கிலும் அமர்ந்திருந்தனர். ஸ்ரீ.அ.சபாபதிப்பிள்ளை அவர்கள் வரவேற்புப் பத்திரத்தை வாசித்தார்.

தொடர்ந்து சுவாமி அவர்களின் சொற்பொழிவு இடம்பெற்றது. அவர் தூய உடலின் அழகும் அருள் பொழியும் வதனமும் மக்கள் கண்களில் நிறைந்தன. அனைத்து மக்களும் புலன்வழி செல்லாது அம்மகானின் உரையையே செவிமடுத்தனர். சமயப்பற்றுஇ நாட்டுப்பற்று ஆகிய இரண்டையும் தன் ஒரு மணி 40 நிமிட சொற்பொழிவில் வலியுறுத்தினார். இங்கு குறிப்பிட வேண்டிய மற்றுமொரு முக்கிய விடயம் யாதெனில் அன்றைய நிகழ்வில் சுவாமிஜீயின் உரையைக் கேட்பதற்காக இந்துக்கள்இ கிறிஸ்தவர்கள்இ இஸ்லாமியர்கள்இ பௌத்தர்கள் என எல்லா மதத்தினரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டோரின் விருப்பப்படி காப்டன் சேவியர் சுவாரசியமான உரை நிகழ்த்தினார். தான் இந்து மதத்தை ஏற்று சுவாமிஜீயுடன் வந்தது எதனால் என்பதையும் விளக்கிக் கூறினார்.
\
யாழ்ப்பாணத்து ஊர்வலத்தில் மேலும் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் யோகர்சுவாமிகள் சுவாமி விவேகானந்தர் வந்த கோச் வண்டியை தேர் வடம் இழுப்பது போல தானும் ஒரு ஓரமாக வண்டியை பற்றிக் கொண்டு வந்ததாக பருத்தித்துறை ஸ்ரீ சாரதா சேவாச்சிரமத்தைச் சேர்ந்த சுவாமி சித்ரூபானந்தர் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சுவாமிஜீயின் யாழ்ஃஇந்துக்கல்லூரி பேருரை இலங்கை வாழ் இந்துக்களுக்கு புத்துணர்ச்சியை தூண்டி விட்டது. அவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருளுரைகளை அறிந்துகொள்ள விரும்பினர். அவ்வாறான அருளுரைகளை கூறத்தக்க உபதேசிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படியும் வேண்டுதல் விண்ணப்பம் சுவாமிஜீக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இன்னும் பல அமைப்புகள் சுவாமிஜீயை வரும்படி அழைப்புகளை அனுப்பின. ஆயினும் அவ் அழைப்புக்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது உடல்நிலை இடம் கொடுக்காதது ஒருபுறமிருக்க சிக்காகோ பிரசங்கத்தின் பின் அவர் இந்திய தாய் மண்ணில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார். மேலைத்தேய விஜயம் அவர் ஆழ் மனதை வெகுவாக தூண்டிஇ இந்தியா தன் பேச்சுக்கு கட்டாயமாக செவிசாய்க்க வேண்டும் என ஆவேசமாக கர்ச்சித்ததும் உண்டு.

அவர் யாழ்ப்பான விஜயத்தை முடிக்கும் முன் ஈஸ்வரன் கோயிலையும் கார்த்திகேயன் கோயிலையும் தரிசித்தார். அவ்வாலயங்களில் இலங்கை இந்து பக்தர்கள் நடந்து கொண்ட விதம் அதாவது பக்திப் பரவசமும் ஒழுங்கும் அவர் மனதைத் தொட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னுமோர் இடத்தில் இலங்கை இந்துக்கள் சாதுக்களை மதிக்கும் பணிவினையும் குறிப்பிட்டுள்ளமை நோக்கக் கூடியது. அதேபோல அந்த ஒரு வார காலத்தில் ஈழப் பெருமக்களும் வேதாந்த சிறப்பில் மனம் திறக்கப்பட்டனர். சுவாமிஜீயின் ஒரு வாரகால விஜயமே ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் இலங்கையில் தடம் பதிப்பதற்கு அடிநாதமாக இருந்தது என்பதையும் உணர முடிகின்றது.

26ஆம் திகதி தை மாதம் 1897 ஆம் ஆண்டில் சுவாமிஜீ மீண்டும் இந்தியா செல்வதற்காக இரவு ஒரு மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார் (மூன்று இரவுகளும் இரண்டு பகல் பொழுதும் அவர் அலை கடலில் கழித்ததாக கூறப்படுகின்றது.) கொழும்பு துறைமுகத்திலிருந்து பாம்பன் அணை மறு கரையை (ராமேஸ்வரத்தை) அடைய நான்கு நாட்கள் பயணிக்க வேண்டியதாயிற்று.

சூசுவாமிஜீயின் இலங்கைக்கான 3வது விஜயம்
1899 இல் சுவாமிஜீ மீண்டும் மேற்கு நாடுகளுக்கும் செல்லும் வழியில் ஒரு நாள் கொழும்பில் அவர் திருப்பாதங்களை பதித்தார் அது 1899 ஆம் ஆண்டு ஆனி மாதம் 28ஆம் தேதி ஆகும். அன்று அவர் தன் பழைய நண்பர்களை சந்தித்து உரையாடும் நாளாகவே அமைந்தது. கொழும்பு நண்பர்கள் சுவாமியை இலங்கைத் துறைமுகத்தில் தரை இறங்குவதற்கான அனுமதியை பெற்றிருந்தனர். மேதகு பி.முத்துக்குமாரசுவாமியும் அவர் தன் மனைவி மகனுடன் சுவாமியை தரிசிக்க வந்திருந்தனர.; சுவாமிஜீயுடன் சகோதர துறவி துரியானந்தரும் வந்திருந்தார்.

சுவாமிஜீ தகுந்த மரியாதைகளுடன் வாத்தியங்களோடு தோட்டத்தில் உள்ள இந்து வாலிபர் சங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நூற்றுக்கணக்கானோர் அம் மகானை தரிசிக்க ஆவலுடன் குழமினர். அவர் இம்முறை லண்டனுக்கு செல்வதற்காக ஆங்கில உடை அணிந்திருந்தார். ஆனாலும் இலங்கை மக்கள் சுவாமிஜீக்கு அதே மரியாதை அதே உபசரிப்பு வணக்கம் எல்லாவற்றையும் அன்போடு செய்தனர். பழங்களும் தெங்கு இளநீரை அளித்து விருந்தோம்பினர்.சகோதரி நிவேதிதா அவருடன் சென்றிருந்தார். சுவாமிக்கு கிடைத்த வரவேறபையும் பிரியாவிடையையும் மெச்சித் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். 'பக்தி பரவசத்துடன் மக்கள் கூட்டம் சுவாமிஜீயில் விழி பதித்திருந்தனர்.' என்றும் குறிப்பிடுகின்றார். அன்றே சுவாமிஜீ தன் மேலைத்தேய பயணத்தைத் தொடர்ந்தார். இலங்கை மக்கள் உணர்ச்சி வசமாக சுவாமிகளுக்கு விடை கொடுத்தனர். 

அதுவே சுவாமிஜீயின் இலங்கைக்கான இறுதி யாத்திரை ஆகவும் அமைந்துவிட்டது. அதன்பின் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் சுவாமிஜீயின் வருகையை தொடர்ந்து இலங்கைக்கு வந்தனர். அவர்களின் வருகையால் ராமகிருஷ்ண இயக்கம் இன்றுவரை உயிர்ப்புடன் இயங்குகிறது

 (விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா )








Comments