16.02.21- தொலைத்தொடர்பு கோபுரநிருமாணத்தை நிறுத்துமாறு பொதுமக்கள் போர்க்கொடி..

posted Feb 15, 2021, 5:51 PM by Habithas Nadaraja
கல்முனையைடுத்துள்ள பெரியநீலாவணைக்கிராமத்தில் மக்களின் விருப்புக்கு மாறாக மக்கள் செறிந்துவாழும் குடிமனைகள் அமைந்துள்ள பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டுவரும் தனியார் தொலைத்தொடர்பு கோபுரப்பணியை உடனடியாக நிறுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடக்கம் அப்பிரதேசத்தில்வாழும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் வரை மகஜளர்களைக் கையளித்துள்ளனர்.

எதிர்காலத்தில் எமது குழந்தைகள் முதியோர்கள் மாணவர்கள் கர்ப்பிணித்தாயய்மார்கள் உள்ளிட்ட அனைவரும் உடல்உள ரீதியாக பாதிக்கப்படலாம்.

மேலும் பொதுமக்களாகிய எங்களிடம் எவ்வித ஒப்புதலும் இல்லாமல் இதனை அமைக்க அனுமதி கொடுத்தது யார்?
எனவே இதனை உடனடியாக நிறுத்தவேண்டுமென அவர்கள் கோருகிறார்கள்.

மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் த.கலையரசன் மாநகரசபை உறுப்பினர் ராஜன் ஆகியோர் அங்கு விஜயம்செய்யவிருப்பதாகத்தெரிகிறது.


(வி.ரி.சகாதேவராஜா)


Comments