16.05.20- வவுனியாவில் “மாணிக்கதாசன் பவுண்டேசனின்” முதலாவது “நிவாரண உதவி வழங்கல்” நிகழ்வு..

posted May 16, 2020, 7:00 PM by Habithas Nadaraja
கடந்த மே முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட, “மாணிக்கதாசன் பவுண்டேசன்” எனும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஆனது தனது முதலாவது செயல்பாடாக வவுனியாவில் இன்றையதினம் காலை ஆரம்பித்து உள்ளனர்.

அதாவது கொரோனா தொற்று நோய் தாக்கம் பரவாமல் தடுப்பதற்கு நாடு பூராவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் வவுனியா மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில குடும்பத்தினருக்கு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின் அரசியல் பிரிவான, “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” வவுனியா மாவட்ட பொறுப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புளொட் அமைப்பின் தோழர்களான கண்ணாடி சிவா, பாபா ஆகியோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வில், பயனாளிகளுக்கான உலருணவுப் பொதிகள் இவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட்து.

மேற்படி உலருணவுப் பொதிகளுக்கான நிதியை புளொட் சுவிஸ் தோழர்களில் ஒருவரான திரு.புவி (Zurich) அவர்களின் குடும்பத்தினர் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

“தடைகைளை உடைத்து, சமூகத்தை உயர்த்து” எனும் தாரக மந்திரத்துடன், கடந்த 2020 மே முதலாம்திகதி அன்று சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களுடன் இணைந்து “புளொட்” தோழர்கள் சிலரினால் ஆரம்பிக்கப்பட்ட “மாணிக்கதாசன் பவுண்டேசன்” எனும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஆனது “இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து” வழமை போல், “மக்கள் பணியாற்றும்” என்பதை அனைவருக்கும் அறியத் தருவதுடன், அப்பணியில் நீங்களும் இணைந்து செயல்படுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
Comments