17.01.22- அதிபர் ஆசிரியர்களுக்கான சம்பள மாற்றம் இம்மாதம் முதல் வழங்கப்படும்..

posted Jan 16, 2022, 7:34 PM by Habithas Nadaraja
அண்மையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்திருத்தத்தை இம்மாதம் முதல் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

அரச நிருவாக சுற்றறிக்கை இல.03 /2016(IV) இலக்க 2022.01.05மற்றும் கல்விஅமைச்சின் செயலாளரது 02 /2022 இலக்க 2022.01.06ஆம் திகதிய சுற்றுநிருபத்திற்கமைவாக இத்திருத்தப்பட்ட சம்பளம் வழங்கப்படவிருக்கிறது.

 சம்பளத்திருத்தம் தொடர்பான மாதிரிப்படிவமொன்று தயாரிக்கப்பட்டு சகல வலயக்கல்விப்பணிமனைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  

அதன்படி சம்பள மாற்றங்களை மேற்கொண்டு ஜனவரிமாதம் முதல் வேதனங்களை வழங்குமாறு கேட்டுள்ளேன். அதற்கிணங்க சம்பளதிருத்தப்பிணகள் சகல வலயக்கல்விக்காரியாலயங்களிலும் ஜருராக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே இம்மாதம் முதல் அதிபர் ஆசிரியர்களது திருத்தப்பட்ட சம்பளம் வழங்கப்படும் என்றார்.

அரசினால் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 5000 ருபா விசேட கொடுப்பனவாக வழங்கப்படும் என்று கூறப்பட்டதே. அது இம்மாதம் வழங்கப்படுமா? என்று கேட்டதற்கு "அது தொடர்பில் எந்த சுற்றுநிருபமும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. எதற்கம் தலைமை கணக்காளரிடம் கேட்டு அப்படி சுற்றுநிருபம் வந்திருந்தால் அதனையும் வழங்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.


( வி.ரி.சகாதேவராஜா)Comments