18.05.20- வியாழேந்திரனின் முயற்சியால் 7பேர் கல்முனை வருகை..

posted May 17, 2020, 6:13 PM by Habithas Nadaraja   [ updated May 17, 2020, 6:14 PM ]

கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இருமாதகாலத்திற்கும் மேலாக கொழும்பில் சிக்குண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த ஏழுபேர் (17.05.2020) மாலை கல்முனை வந்துசேர்ந்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் அதீத முயற்சியால் இவ்விரண்டாவது தொகுதியினர் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டனர்.

இவர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்குள்ள நடைமுறைகளின்பின்பு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

அண்மையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த ஒரு தொகுதியினர் வியாழேந்திரனின் முயற்சியால் அழைத்துவபை;பட்டிருந்தனர். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்தோர் வரவழைக்கப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டோருடன் முன்னாள் எம்.பி. வியாழேந்திரனும் வருகை தந்திருந்தார்.

கடந்த 2மாதகாலத்திற்கும் மேலாக கொழும்பில் சிக்குண்டிருந்த எங்களை யாரும் ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காதிருந்தவேளையில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி.வியாழேந்திரன் இவ்வாறு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்த உதவியை நாம் வாழ்நாளில் மறக்கமாட்டோம் என வருகைதந்த பயணிகள் தெரிவித்தனர்.

(காரைதீவு சகா)Comments