18.10.19- கிழக்கு மாகாண சகல சுகாதார பணிப்பாளர்கள் நியமனங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது..

posted Oct 17, 2019, 6:03 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாண சகல சுகாதார பணிப்பாளர்கள் நியமனங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது
சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜெயசிங்க அவசர உத்தரவு..


கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இ அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்தரத்துச்செய்யும் உத்தரவை சுகாதார போசணை மற்றும் சுதேசவைத்திய அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜெயசிங்க அவசரமாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவித்தல் கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பணிப்பாளர்களுக்கும் பாக்ஸில் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் காலமாகவிருந்தும் இவ்விடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதே ரத்துக்குக்காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனும்இ அக்கரைப்பத்து வைத்தியசாலைப் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஐ. எம்.ஜவாஹீரும்இ கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.ஷகீலா இஸடீனும் நியமனம் வழங்கப்பட்டு நேற்றுமுன்தினம் (16.10.2019)பதவியேற்று இருந்தனர்.

எனினும் இந்த நியமங்கள் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் தொடர் அழுத்தத்தின் பெயரில் வழங்கப்பட்ட நியமங்கள் என அரச மருத்துவர் சங்கத்தால் கடும் ஆட்சபனை தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் காலத்தில் இவ்வாறான அரசியல் நியமனங்கள் வழங்கப்பட முடியாது எனவும் இவை சுகாதார சேவையில் உள்ள சேவை தகுதி மூப்பு அடிப்படையிலான நியமன விதிமுறைகளுக்கும்இ பொதுசேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நியமனங்களுக்கும் முற்றிலும் முரணானது எனவும்இ அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

கல்முனையில் சுகாதாரநிருவாகம் தடுமாறுகிறதா?

அதேவேளை கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் சுகுணன் அரசகட்டளைப்படி நேற்றுமுன்தினம் மட்டு மாவட்ட சுகாதாரவேவைப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டு நேற்றுமுன்தினம்(16) கடமையேற்றிருந்தார்.

அவருக்கு நேற்று(17) வியாழக்கிழமை மீண்டும் கல்முனைக்கு செல்லுமாறு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தின்உத்தரவு கிடைத்தமையினால் அவர் நேற்று கல்முனைக்கு வந்தார்.ஆனால் அச்சமயம் மாகாணசுகாதாரசேவைப்பணிப்பாளராகச்சென்ற டாக்டர் எ.அலாவுதீன் கல்முனை அலுவலகத்தில் பணிப்பாளர் அறையில் இருந்துள்ளார். அதனால் பணிப்பாளர் சுகுணனுக்கு எங்கிருப்பது எனத்தெரியாமல் வேறொரு அறையிலிருந்ததாகக்கூறப்படுகிறது.மாகணப் பணிப்பாளர் அலாவுதீன் தான் கல்முனையை பதில் கடமைபார்க்கவிருப்பதாக கூறியதாகக்கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அரசமருத்துவசேவைகள் சங்க கிழக்கு மாகாணபிரதிநிதிடம் கேட்டபோது இது தேர்தல்காலம் எந்தவித இடமாற்றமோ நியமனமோ யாரும் செய்யமுடியாது.

மாகாணப்பணிப்பாளர் அலாவுதீன் கல்முனையில் பதில்கடமையாற்றமுடியாது. அவருக்கு யாரும் இவ்வுத்தரவை பிறப்பித்திருக்கமுடியாது. அவர்கூட தன்னிச்சையாக இத்தேர்தல் காலத்தில் அங்க பதில் கடமைக்கு ஒருவர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருக்கும்போது பதில்கடமையாற்றமுடியாது.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனம் பெற்றவர் டாக்டர் சுகுணன். எனவே அவரே கல்முனை பணிப்பாளராக கடமையாற்றக்கூடியவர் என்றார்.

கல்முனையில் இத்தகைய தில்லுமுல்லுகளுக்கு திரைமறைவில்இரு அரசியல்வாதிகள் பின்புலத்திலிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை மாகாணபணிப்பாளராக டாக்டர் அலாவுதீன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிற்பாடே. எனவே அதுவும் ரத்துச் செய்யப்படலாமென சுகாதாரசேவை வட்டாரங்கள் தெரிவித்தன.


Comments