19.02.20- கிழக்கில் ஆக 242தொற்றாளர்ளே வைத்தியசாலைகளில் சிகிச்சை..

posted Feb 18, 2021, 5:50 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாணத்தில்  தற்போது ஆக 242பேரே எட்டு வைத்தியசாலைகளில் கொரோனாச்  சிகிச்சையில் உள்ளனர். கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை 2750ஜ தாண்டியுள்ளது.அங்கு நேற்றையதினம்(18.02.2021) 2786 ஆகியது.அதேவேளை கல்முனைப்பிராந்தியம்  1344 ஆக உயர்ந்தது.

கடந்த 12மணிநேரத்துள் யாரும் தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த மார்ச் மாதமிருந்து  பேலியகொட மூலமாக இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 1344பேரும்     மட்டக்களப்பு மாவட்டத்தில் 659பேரும் திருமலை மாவட்டத்தில் 527 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 233பேருமாக 2763பேர்  தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.மேலும் வெளிநாடு மினுவாங்கொட கந்தக்காடுகொத்தணி வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.

இதுவரை கிழக்கிலுள்ள 08 கொரோனா வைத்தியசாலைகளில் 4129 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3868பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். தற்போது ஆக 242பேரே எட்டு வைத்தியசாலைகளிலும் உள்ளனர். அங்கு 604 கட்டில்கள் காலியாகவுள்ளன.

இதுஇவ்வாறிருக்க 28263பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை 64190பேர் அன்ரிஜன் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

18மரணங்கள்
இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை வவுணதீவு காத்தான்குடி நாவிதன்வெளி  ஆலையடிவேம்பு உகனை  காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம்  18 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

அதிகூடிய 04மரணங்கள் சாய்ந்தமருதில் சம்பவித்துள்ளது.கல்முனைப்பிராந்தியத்தில் 10பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 06பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் இருவருமாக இந்த 18 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

இத்தரவுகளை  கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 ( வி.ரி.சகாதேவராஜா)


Comments