20.03.20- அரசாங்க ஊழியர்களுக்கு 23ஆம் திகதி சம்பளம்..

posted Mar 19, 2020, 6:31 PM by Habithas Nadaraja
அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் (கூட்டுத்தாபனம், சபை, திணைக்களம்) எதிர்வரும் திங்கட் கிழமை சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வரும் 23 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான பணிகள் நிதி அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் - 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கு நாட்டுக்காக தம்மால் மேற்கொள்ளப்படவேண்டிய பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்காக இதுவரையில் அரசாங்க ஊழியர்கள் அர்ப்பணித்திருப்பதை தாம் நன்கு அறிவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Comments