20.10.19- தபால்மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் நாளை விநியோகம்..

posted Oct 19, 2019, 8:15 PM by Habithas Nadaraja
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக நேற்று தபால் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 21 ஆம் திகதி தொடக்கம் இவை சம்பந்தப்பட்ட தபால்மூல வாக்களிப்போருக்கு விநியோகிக்கப்படுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் தேர்தல் தொடர்பான 87 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய தேசிய முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 32 ஆகும்.
மாவட்ட முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 55 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த 8ம் திகதி தொடக்கம் நேற்று வரையில் 938 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.


Comments