21.01.20- கல்முனையில் நடைபெற்ற 'உள ஆரோக்கியம்' அறிவூட்டல் கண்காட்சி – 2020..

posted Jan 20, 2020, 5:36 PM by Habithas Nadaraja   [ updated Jan 20, 2020, 5:41 PM ]
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்   'உள ஆரோக்கியம்'அறிவூட்டல் கண்காட்சி – 2020.கடந்த (17.01.2020) முதல் (20.01.20) வரை இடம்பெற்றது.

கடந்த  ஆரம்பமான இக்கண்காட்சியை கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ரகுமான்உள்ளிட்ட அதிதிகளும் கலந்துசிறப்பித்தார்கள்.

அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் மனோதத்துவ வைத்திய நிபுணர் டாக்டர் ஜுருஷ்  ஒருங்கிணைப்பில் இக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றுவந்தது. பல வைத்திய நிபுணர்கள் வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மருத்துவ பீட மாணவர்கள்  ஒத்துழைப்புடனும் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

சிறுவர் மற்றும் கட்டிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் உளநலப் பிரச்சினைகளும்போதைப் பொருள் பாவனையின் தீங்குகளும்உள நோய்கள் பற்றிய விளக்கங்களும்உள ஆற்றுபடுத்தல் சிகிச்சை முறைகளும்பால் நிலை வன்முறை ஒழிப்பு தொடர்பான தெளிவூட்டல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.தரம் 6 இற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஏனையவர்கள் பயனடையுமாறு இக்கண்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் பொதுமக்கள் சென்று பார்வையிட்டு உளவள நிலைமைகள் சம்பந்தமான பூரண அறிவை பெற்றுக் கொள்ளக்கூடியதாக மிக விசேடமாக அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்று தினங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இக்கண்காட்சியை கண்டுகளித்தனர். மாணவர்களும் சாரிசாரியாக வருகைதந்து கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்களுக்கு போதுமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. பொலிசாரும் பார்வையிட்டனர். கிழக்கு பல்கலைகலைக்கழக உளவியல்துறை மருத்துவத்துறை சார்ந்த மாணவர்களும் வருகைதந்து பார்வையிட்டதைக்காணமுடிந்தது.

மூன்றுதினங்களுக்கு மாத்திரமே திட்டமிட்டு நடாத்தப்பட்ட  இக்கண்காட்சியை பாடசாலை மாணவர்களின் வேண்டு கோளினையடுத்துதரம் 6க்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை நாளில் கண்டுபயன்பெறும்வண்ணம்  4வது நாளாக இக்கண்காட்சி நீடிக்கப்பட்டிருந்ததாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி  டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

சமகாலத்தில் உளநெருக்கிடைக்குள்ளாகும் மனிதர்களின் தொகை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அந்தவகையில் உளவியல் ரீதியில் நடாத்தப்பட்ட இக்கண்காட்சியை பலரும் வரவேற்று பதிவிட்டுள்ளனர்.


காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா


Comments