21.03.20- தபால் சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது..

posted Mar 20, 2020, 7:14 PM by Habithas Nadaraja   [ updated Mar 20, 2020, 7:15 PM ]
நாட்டில் நிலவும் நிலமை வழமைக்கு திரும்பியவுடன், விநியோக பொதிகளை விநியோகத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வயதானோர் நோய் நிலமையில் உள்ளவர்களை அலுவலகத்திற்கு அழைப்பது, அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் நிலமை என்பதினால் வயதானோர் மற்றும் நோயினால் பீடிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதையும் இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக  தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கட்டுள்ளது.


அந்த ஊடக அறிக்கை பின்வருமாறு:

2020.03.20

பணிப்பாளர் (செய்தி)
செய்தி ஆசிரியர்

தபால் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தல்

COVID – 19 வைரசு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் அனர்த்தத்தின் காரணமாக மீண்டும் அறிவிக்கும் வைகையில் அனைத்து தபால் நடவடிக்கைகள் இடைநிறுத்துவது தொடர்பில் தபால் திணைக்கள தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்தின அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை தொடர்பில் தேவையான நடவடிக்கைக்காக அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் திணைக்களம்
அஞ்சல் தலமையகம் 310, டிஆர் விஜயவர்தன மாவத்தை, கொழும்பு 01000

தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்
அரசாங்க தகவல் திணைக்களம்
எசிதிசி மெதுர பொல்ஹேன்கொட
கொழும்பு -05

தபால் திணைக்களத்தின் நடவடிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தல்
COVID – 19 வைரசு நோய் பரவும் அனர்த்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானோரின் நன்மை கருதி முன்னெடுக்கப்படும் நடைமுறைப்படுத்தப்படும் தபால் நடவடிக்கைப் பணிகள் முன்னெடுப்பது சிரமம் என்பதினால் மீள அறிவிக்கும் வரையில் அனைத்து தபால் செயற்பாட்டு பணிகளை இடைநிறுத்தப்பட்டிருப்பதாக இதன் மூலம் அறியத்தருகின்றோம்.

விசேடமாக கிடைக்கப்பெறும் பொதி மற்றும் தபால் பொருட்கள் மத்திய தபால் பரிமாறல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டில் நிலவும் நிலமை வழமைக்கு திரும்பியவுடன் விநியோகத்திற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வயதானோர் நோய் நிலமையில் உள்ளவர்கள் அலுவலகத்திற்கு அழைப்பது அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் நிலமை என்பதினால் வயதானோர் மற்றும் நோயினால் பீடிக்கப்பட்டோர் கொடுப்பனவு இடைநிறுத்த வேண்டி ஏற்படுவதை பணிவுடன் அறிவிக்கின்றோம். தபால் செயற்பாட்டு நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பிய சில தினங்களின் பின்னர் இந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலே குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக கொரோனா வைரசு ஒழிப்பு செயலணி உடன்பாட்டைப் பெற்றுக் கொண்டு ஊடகம் மூலம் விளம்பரப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Comments