21.10.21- இராணுவத்தால் பெரியநீலாவணையில் வீடு திறந்துகையளிப்பு..

posted Oct 20, 2021, 5:28 PM by Habithas Nadaraja
இலங்கை இராணுவம் ,பெரியநீலாவணையில் வசதிகுறைந்த தமிழ்க்குடும்பமொன்றிற்கு புதிய வீடு ஒன்றை நிருமாணித்து (19.10.2021) கையளித்தது.

இராணுவத்தால் ,பெரியநீலாவணை 1 "பி " பிரிவில் நிருமாணிக்கப்பட்ட  இந்த புதிய வீட்டை இலங்கை இராணுவத்தின் கிழக்குமாகாணத்திற்கான கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் வீரசூரிய திறந்துவைத்தார்.

திறப்புநிகழ்வில், ஒரேயொரு அரசியல் பிரமுகராக  த.தே.கூட்டமைப்பின் கல்முனைமாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்  கலந்து சிறப்பித்தார்.

முன்னதாக மேஜர் ஜௌரல் வீரசூரிய நாடாவெட்டி பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்து தமிழ்க்குடும்பத்திடம் வீட்டுச்சாவியைக் கையளித்தார்.

அங்கு, சம்பிரதாயபூர்வமாக குத்துவிளக்கேற்றி பால் காய்ச்சி விசேட ஆராதனை செய்ததுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு வீட்டுபகரணங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டன.

இராணுவம் மற்றும் நலன்விரும்பிகளின் நிதியுதவியுடன், இராணுவம் இவ்வீட்டை நிர்மாணித்துக்கொடுத்தது.
கொரோனா தாக்கம் காரணமாக சுமார் அரைமணிநேரம் மட்டுப்படுத்தப்பட்டஅளவில் இத்திறப்புவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 ( வி.ரி.சகாதேவராஜா)
Comments