22.03.20- கொரோனா வைரஸ் - 'தனிமைப்படுத்தற்குரிய நோய்' வர்த்தமானி அறிவிப்பு..

posted Mar 22, 2020, 2:59 AM by Habithas Nadaraja
கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், 'தனிமைப்படுத்தற்குரிய நோய்'  Quarantine and Prevention of diseases  என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இதனை பிரகடனப்படுத்தியுள்ளார்.


தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அந்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டுள்ளார்.


இதற்கமைய, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Comments