22.03.21- கப்பல்துறையில் இடம்பெற்ற தேசிய மகிழ்ச்சி தின விழா..

posted Mar 21, 2021, 6:38 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தேசிய மகிழ்ச்சி தின' நிகழ்வு (20.03.20218) கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், ஆளுநர் செயலக உதவிச் செயலாளர், ஆயுர்வேத இணைப்பாளர்கள், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எஸ்.நவேந்திர ராஜா, திட்டமிடல் வைத்திய அதிகாரினளான வைத்தியர் எஸ்.சிவச் செல்வம், வைத்தியர் எஸ்.உதயனன், கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எஸ்.துஷிதா, நிலாவெளி மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.நிரன்ஜன் மற்றும் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.    

கடந்த காலங்களிலும், தற்போதும் சுதேச மருத்துவ திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளும், வைத்தியமுறைகள் பற்றிய விளக்கங்களுடன் காணொளிகள் காண்பின்னப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பைஷல் இஸ்மாயில் Comments