21.06.22- கொக்கிளாயில் இருந்து புல்மோட்டைக்கு இயந்திர படகில் கதிர்காம பாதயாத்திரை குழுவினர்..

posted Jun 21, 2022, 6:15 PM by Habithas Nadaraja   [ updated Jun 21, 2022, 6:43 PM ]
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் கதிர்காம பாதயாத்திரை குழுவினர் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.

 நேற்று மாலை கொக்கிளாயில் இருந்து இயந்திரப் படகுகள் மூலம் அவர்கள் புல்மோட்டை வந்திருக்கின்றார்கள்.

 கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை நேற்று 13-வது தினமாக சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

 கதிர்காம பாதயாத்திரை பேரவையின் தலைவர் எஸ் .ஜெகராஜா தலைமையில் இந்த குழுவினர் வந்து கொண்டிருக்கின்றார்கள் .

மொத்தமாக எண்பத்தி ஏழு அடியார்கள் இந்த பாதயாத்திரை குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். 

 நேற்றைய தினம் கொக்குளாய் முருகன் ஆலய நிர்வாகத்தினர் இன்றைய எரிபொருள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த இயந்திர படகுகளை கடற்படை உதவியோடு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

( வி.ரி.சகாதேவராஜா)










Comments