21.06.22- அரசடித்தீவு முத்துமாரியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்..

posted Jun 21, 2022, 6:23 PM by Habithas Nadaraja   [ updated Jun 21, 2022, 6:44 PM ]
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற  ஸ்ரீ   முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்   23ஆம் திகதி  நடைபெற இருக்கின்றது.

முன்னதாக, நேற்று 21ஆம் திகதி கருமாரம்பம் ,கிரியைகள் ஆரம்பமாகின.  இன்று 22 ஆம் தேதி புதன்கிழமை அம்பாளுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெறும்.

நாளை 23 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு  புனராவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பக்ஷ  மகாகும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தலைவர்  கா.தியாகராசா மற்றும் செயலாளர் செ. முருகுப்பிள்ளை (ஆசிரியர் )தெரிவித்தனர் .

பிரபலசிவாச்சாரியார் சிவ ஸ்ரீ  க.கு சச்சிதானந்த சிவம் குருக்கள் தலைமையில் இந்த மகா கும்பாபிஷேகம் இடம்பெற இருக்கின்றது.

 இன்று எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் 22ஆம் தேதி இன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆலய செயலாளர் செ. முருகுப்பிள்ளை தெரிவித்தார்.


நாளை 23ஆம் திகதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 24-ஆம் தேதி தொடக்கம் மண்டலாபிஷேக பூஜைகள் யூலை மாதம் நான்காம் தேதி வரை நடைபெறும் .

யூலை 5ஆம் திகதி பாற்குடபவனி பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து  முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடையும். 

 அதனைத் தொடர்ந்து அன்று மகா சங்காபிஷேகம்  இடம்பெற இருக்கின்றது என  ஆலய செயலாளர் செ.முருகுப்பிள்ளை தெரிவித்தார்.


( காரைதீவு நிருபர்)



Comments