21.06.22- திருக்கோவில் பிரதேசத்தில் டீசல் மண்ணெண்ணெய் பிரதேச செயலகத்தின் முறையான ஒழுங்கமைப்பில் ..

posted Jun 21, 2022, 6:05 PM by Habithas Nadaraja   [ updated Jun 21, 2022, 6:42 PM ]
திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் விவசாயிகள் , மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் முறைப்படி டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுக்கொண்டுவருகின்றது...

இதற்கமைவாக திருக்கோவில் பிரதேசத்தில் விவசாயம் மற்றும் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபடுகின்ற பொது மக்களுக்காக திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றம் விவசாய கமநல சேவை,நிலையம் ஊடாக அனுமதி அட்டை(ரோக்கன்)  வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று குறித்த அதிகாரிகள்    கூடி ரோக்கனை விநியோகம் செய்து எரிபொருளை முறைப்படி வழங்கினர்.

மேலும் இவ் நிகழ்ச்சி  திட்டமானது திருக்கோவில்,பிரதேச செயலாளரின்,நேரடி கண்காணிப்பிலும்  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், திருக்கோவில் பல்நோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற வருகின்றது .

மேலும் இனிவரும் பெற்ரோல் தவிர்ந்த டீசல் ,மண்ணெண்ணெய் ஆகியவை  ரொக்கன் 

 (    வி.ரி.  சகாதேவராஜா)Comments