25.11.19- கிழக்கில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான நிலையறிபரீட்சை..

posted Nov 24, 2019, 5:50 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாணத்தில் 2020இல் தரம் 5 புலமைப்பரிசில்பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான நிலையறி பரீட்சை (24.11.2019)
நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் இப்பரீட்சையை கிழக்கிலுள்ள 17கல்வி வலயங்களிலும் மூவினமாணவர்களுக்குமாக  நடாத்தியது.

தரம் 4இல் கல்விபயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்  இப்பரீட்சைக்குத் தோற்றினர்.புலமைப்பரிசில் பரீட்சை போன்று மாதிரிப்பரீட்சையாக தயாரிக்கப்பட்ட பத்திரங்கள் மாகாணகல்வி பணிமனையிலிருந்து வலயங்களுக்கு கையளிக்கப்பட்டு  பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

ஆரம்பநெறி ஆசிரியகள் அதிபர்கள் கண்காணிப்பில் வலயக்கல்விப்பபணிமனை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில்இப்பரீட்சை முறைப்படி நடைபெற்றமை குறிப்பிடத்தகக்கது.

இவ்வாண்டு நடைபெற்ற தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் கிழக்குமாகாணம் ஒருபடி முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் அடுதாண்டு அதைவிட இரண்டு மடங்கு முன்னேற்றம் காணவேண்டும் என்ற நோக்கில் இப்பரீட்சையை சமகாலத்தில் இன்று நடாத்துவதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

காரைதீவு  நிருபர்


Comments