26.01.20- அம்பாறை மாவட்டத்தில் 76 கி.மீ கிராமிய வீதி கார்ப்பட் வீதிகளாக அபிவிருத்தி..

posted Jan 25, 2020, 5:26 PM by Habithas Nadaraja
அம்பாறை மாவட்டத்தில் 76 கிலோ மீற்றர் கிராமிய வீதிகள் கார்ப்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வீதிகள் 3000 மில்லியன் ருபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் இவ்வீதிகள் கார்ப்பட் வீதிகளாக மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் 75.46 கிலோ மீற்றர் தூரமுள்ள கிராமிய வீதிகள் 297 294 3809.05 ருபா செலவில் கார்பட் வீதிகளாக மாற்றப்பட்டு வரவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட பொறியியலாளர்  தெரிவித்தார்.Comments