27.11.19- கடல்சீற்றம் உல்லையில் உல்லாசத்துறை பாதிப்பு படகுகள் கரையில்..

posted Nov 26, 2019, 5:35 PM by Habithas Nadaraja   [ updated Nov 26, 2019, 5:36 PM ]
இலங்கையில் நிலவும் காலநிலைமாற்றத்தால் கிழக்கின் உல்லாசப்பயணிகளின் சொ ர்  க்காபுரியாக விளங்கும் அறுகம்பை எனப்படும்உல்லைப்பிரதேசமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு கடல் சீற்றமாக இருப்பதால் உல்லாசப்பயணிகள் யாரும் வருகைதரவில்லை.இதனால் அங்குள்ள உல்லாச விடுதிகள் வெறிச்சோடிக்கதகாணப்படுகின்றன.

மேலும்கடல் அலைகள் பெரிதாக ஆர்ப்பரிக்கின்ற காரணத்தினால் யாரும்நீராடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீன்பிடித்தொழிலுக்குச் செல்லும் இயந்திரப்படகுகள் உல்லாசபயணிகளுக்கான விரைவுப்படகுகள் உள்ளிட்ட அத்தனை படகுகளும் கரையில்இழுத்து கட்டப்பட்டுள்ளன.

இடையிடையே பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களோ உல்லாசப்பயணிகளோ இந்த சீற்றத்தில் அகப்பட்டுவிடக்கூடாதென்பதில் கவனமாக படையினர் உள்ளனர்.

காரைதீவு சகாComments