27.06.19- பாடசாலை மாணவர்களுக்கான உயர் போஷாக்கை கொண்ட அரிசியை வழங்க நடவடிக்கை..

posted Jun 26, 2019, 6:22 PM by Habithas Nadaraja
உலக உணவு அமைப்பும் விவசாய அமைச்சும் ஒன்றிணைந்து இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருப்பதாக விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

இதன் முதற் கட்டத்தின் கீழ் அநுராதபுர மாவட்டத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 5 இற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இவ்வாறான உணவை வழங்குவதற்கான உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உணவும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வு ஒன்று சீகிரிய சுற்றுலா கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது.Comments