27.06.19- தேசிய கண் வைத்தியசாலைகளை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தல்..

posted Jun 26, 2019, 6:33 PM by Habithas Nadaraja
இலங்கையில் தேசிய கண் வைத்தியசாலைகள் தொடர்ந்தும் சர்வதேச தரங்களுக்கு அமைவாக அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

10. தேசிய கண் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளர் பிரிவு சத்திர சிகிச்சை மற்றும் வார்ட்டுத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 35ஆவது விடயம்)

இலங்கையில் அனைத்து கண் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தேவையான சேவையை வழங்கும் மூன்றாம் நிலை சிகிச்சை சேவை வைத்தியசாலையான இலங்கை தேசிய கண் வைத்தியசாலை தொடர்ந்தும் சர்வதேச தரங்களுக்கு அமைவாக அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2016 – 2025 ஆம் ஆண்டு தேசிய சுகாதார சேவை மூலோபாய பெருந்திட்டம் என்பதன் கீழ் நாட்டின் உயர்தர வைத்தியசாலை என்ற ரீதியில் பயனாளிகளுக்கு மிகவும் தரமிக்க கண் சிகிச்சை சேவையை வழங்குவதற்கு தேவையான அளவு இடவசதிகளைக் கொண்டதாக வெளிநோயாளர் பிரிவு வார்ட் சத்திர சிகிச்சை நோய் பரிசோதனை பராமரிப்பு வசதிகள் மற்றும் ஏனைய நிவாரண சேவைகளை வழங்குவதற்காக 12 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியொன்று 4565 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் நிர்மாணிப்பதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்தறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Comments