27.12.19- உயர்தர பரீட்சை பெறுபேறுகளை கணினியில் உள்ளீடு செய்யும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது..

posted Dec 26, 2019, 6:01 PM by Habithas Nadaraja
 உயர்தர பரீட்சை பெறுபேறுகளை கணினியில் உள்ளீடு செய்யும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது

இம்முறை நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பொறுபோறுகளை கணினியில் உள்ளீடு செய்யும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

3 குழுக்களினால் இந்த பெறுபேறுகள் மீள பரிசோதிக்கும் பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதுடன் இந்த பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

பெறுபேறுகளை மீள பரிசோதிக்கும் பணிகள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கு அமைவாக பெறபேறுகள் கூடிய விரைவாக நாளை வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை உயர்தர பரீட்சை கடந்த ஆகட்ஸ் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையில் நடைபெற்றது. 2678 மத்திய நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.


Comments