30.01.21- இன்று 4870 தடுப்புசிகள் ஏற்றப்படும் என்கிறார் டொக்டர் சுகுணன்..

posted Jan 29, 2021, 5:53 PM by Habithas Nadaraja
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு 4870 கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இத்தடுப்பூசிகள் இன்று (30.01.2021)  வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தடுப்பூசிகள் பிரதான வைத்திய சாலைகளில் முன்வரிசை கடமையில் ஈடுபட்டுள்ள சுகாதார உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதனடிப்படையில் கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார சேவைகள் பிரிவுகளில் 20 நிலையங்களில் வைத்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

வி.ரி.சகாதேவராஜாComments