30.11.19- அம்பாறை பொதுஜன பெரமுன அமைப்பாளரிடம் மக்கள் படையெடுப்பு..

posted Nov 29, 2019, 5:30 PM by Habithas Nadaraja
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபிற்பாடு அம்பாறை கரையோரப்பிரதேசத்தில் பொதுஜன பெரமுன அமைப்பாளர் எச்.பி.பியசேனவிடம் தமிழ்மக்கள் தினமும் படையெடுத்துவருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச இணைப்பாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.பி.பியசேனவின் காரியாலயம் அமைந்துள்ள அக்கரைப்பற்றை நோக்கி தமிழ்மக்கள் பல்வேறுதேவைகள் நிமித்தம் படையெடுத்துவருகின்றனர்.

பொதுமக்கள் ஆலயபிரதிநிதிகள் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட மக்கள் அமைப்பாளர் பியசேனவைச்சந்தித்து தமது தேவைகள் பிரச்சினைகள் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடிவருகின்றனர்.

அங்கு அதற்கான பதிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவரது செயலாளராக ஓய்வுநிலை ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் செயற்பட்டுவருகிறார்.

மேலும் அங்கு செல்லும் பலர் பொதுஜனபெரமுனவில் உறுப்பினர்களாக சேர்ந்துகொள்வதற்கு விருப்பம் தெரிவித்ததையடுத்து அங்கத்துவப்படிவமும் வழங்கப்பட்டு வருகின்றன. பலர் அவ்விடத்திலேயே உறுப்புரிமை பெறுகிறார்கள்.

மக்களின் கோரிக்கைகள் தேவைகள் தொடர்பில் செயலாளர் இராசமாணிக்கம் பதிவிட்டு அந்தந்த அமைச்சுகள் திணைக்களங்களங்களுக்கு முறையிட்டுவருவதையும் அவதானிக்கமுடிந்தது.

(காரைதீவு  நிருபர்)

Comments