31.01.20- பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு..

posted Jan 30, 2020, 5:31 PM by Habithas Nadaraja
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி மற்றும் காலணிகளுக்காக வழங்கப்படும் வவுச்சருக்கான செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வவுச்சருக்கான காலம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இருப்பினும் இது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments