31.01.21- நாளை மட்டு. இ.கி.மிசன் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா..

posted Jan 30, 2021, 7:55 PM by Habithas Nadaraja
நாளை மட்டு. இ.கி.மிசன்  ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா
ந்தியாவிலிருந்து காணொளியில் உலக இ.கி.மிசன் தலைவர் அதிவண.ஸ்மரணானந்த ஜீ
   
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன்  கல்லடி ஆஸ்ரமத்தின் பகவான் இராமகிருஸ்ண பரமஹம்சரின் ஆலயக் கும்பாபிசேகப்பெருவிழா நாளை பெப்.1ஆம் திகதி மங்களகரமான (சார்வரி வருடம்  தை மாதம் 19ம் நாள்) சங்கடஹர சதுர்த்தி சித்தயோகமும் கூடிய சுப தினத்தில் நடைபெறவுள்ளதென  துணைமேலாளர் ஸ்ரீமத் சுவாமி  நீலமாதவானந்த ஜீ மஹராஜ் தெரிவித்தார்.

கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் மேலாளர் சுவாமி ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தர் மஹராஜ்  மற்றும் உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி  நீலமாதவானந்தர் மஹராஜ் முன்னிலையில் ராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர்  தலைமையில் கும்பாபிசேகப்பெருவிழா நடைபெறவிருக்கிறது.

ஆன்மீகஅதிதிகளாக காணொளியில் உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன்  ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜீ மஹராஜ்  உபதலைவர் வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜீ மஹராஜ்  இந்தியா காஞ்சிபுரம் ரா.கி.மடத்தலைவர் வண.ஆத்மகனானந்தஜீ மஹராஜ்ஆகியோர் காட்சியளித்து ஆசியுரையுடன்கூடிய வாழ்த்துரை நிகழ்த்துவார்கள்.

(வி.ரி.சகாதேவராஜா)


Comments