14.01.18- அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்..

posted Jan 13, 2018, 5:40 PM by Habithas Nadarajaவிடியற்காலையில் விடியலாய்
கழனி நோக்கி நீ சென்றாய்

கால் பதித்த கழனியில்
உன் வெள்ளை உள்ளம் கண்டு
ஒட்டிக் கொண்ட சேறுகள்

வயல் வரப்பு பாதைகயில்
உன் பாதச் சுவடுகள்
தினம் தினம் அரங்கேற்றம்

சுட்டெரிக்கும் வெயிலில் 
காந்தி உடையின் பாதியோடு
வியர்வைகள் நீ சிந்துவாய்

நீயும் நெற்கதிரும்
உரையாடுவீரகள் தினம் தினம்
உனக்கு நீ எனக்கு நான்

உழவனாக உன் உழைப்புக்கு
வளர்ந்து விட்ட நெற்கதிர்
தலை சாய்ந்து மரியாதை

தழிழனாய் மட்டும் அல்ல
தரணியில் நல்லதொரு
உழவனாகவும் நீ

தமிழனும் உழவனும்
தரணியில் வாழ்வாங்கு வாழ
ஒற்றுமையாய் சொல்லிடுவோம்

பொங்கலோ பொங்கல்

அனைவருக்கும்
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்

Comments